டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை.. பகீர் கிளப்பும் பிரகாஷ் ஜாவடேகர்

Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில் நீட் தேர்வை அனைத்து மாநிலமும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு என்பது அளிக்க இயலாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.. மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.. ஓ.பி.எஸ் சொல்கிறார் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது.. மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.. ஓ.பி.எஸ் சொல்கிறார்

நீட் விலக்கு இல்லை

நீட் விலக்கு இல்லை

நீட் மாணவர்களிடம் சோதனை நடத்துவது என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது.

தமிழகம் முதன்மை

தமிழகம் முதன்மை

நீட் தேர்வினால் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மாணவர்கள் படிக்கும் நிலை குறைந்துள்ளது. டிஜிட்டல் கல்வி முறையில் கல்வியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். தமிழகம் பிற மாநிலத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது என தெரிவித்தார். இதுபோல் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான கருத்தையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு

பரபரப்பு

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பாஜகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு அக்கட்சியும் தங்களால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் விலக்கு இல்லை என இரு மத்திய அமைச்சர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Union Minister Prakash Javdekar says that there will be no change for giving Neet exemption for Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X