டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா இடங்களை 1000 ஆக உயர்த்த கோரிய பிரணாப் முகர்ஜி.. கையோடு மோடி அரசுக்கு கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்களன்று பேசுகையில், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 இலிருந்து 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியா அறக்கட்டளை ஏற்பாடு செய்த அடல் பிஹாரி வாஜ்பாயின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும் போது , "பெரும்பான்மைவாதத்திற்கு" எதிராக அதிகாரத்தில் உள்ள கட்சிகளை (மோடி அரசை) எச்சரித்தார்,

உன்னாவ்.. குல்தீப் செங்கார் தண்டனை.. டிச. 20ம் தேதி விசாரணை ஒத்திவைப்பு: டெல்லி நீதிமன்றம்உன்னாவ்.. குல்தீப் செங்கார் தண்டனை.. டிச. 20ம் தேதி விசாரணை ஒத்திவைப்பு: டெல்லி நீதிமன்றம்

பெரும்பான்மை

பெரும்பான்மை

இது தொடர்பாக பிரணாப் கூறும் போது, "மக்கள் அவர்களுக்கு எண்களில் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கலாம், ஆனால் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒருபோதும் ஒரு கட்சியை ஆதரிக்கவில்லை.

நினைக்கிறார்கள்

நினைக்கிறார்கள்

இந்திய வாக்காளர்களின் இந்த தன்மை அரசியல் கட்சி தலைவர்களால் தெளிவாக புரிந்து கொள்ளப்படவில்லை. அதனால்தான் சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கும் போது எதையும், எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இருக்கக்கூடாது . கடந்த காலங்களில் இதுபோன்று இருந்தவர்களை மக்கள் பெரும்பாலும் தண்டித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகம்

நாடாளுமன்ற ஜனநாயகம்

தேர்தல்களில் எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான உரிமையை உங்களுக்கு (அரசியல் கட்சிகளுக்கு) வழங்குகிறது. மக்கள் பெரும்பான்மை இல்லாவிட்டால் உங்களை ஒரு பெரும்பான்மை அரசாங்கமாக இருக்க தடை செய்கிறது. அதுதான் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செய்தியும் சாரமும்" என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

சட்டசபை இடங்கள்

சட்டசபை இடங்கள்

லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரணாப் முகர்ஜி பேசுகையில் "நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகையும் , சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் உயர்த்த வேண்டும்.

பிரணாப் கோரிக்கை

பிரணாப் கோரிக்கை

1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடைசியாக 1977ம் ஆண்டு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை திருத்தப்பட்டது. அப்போது நாட்டின் மக்கள் தொகை 55 கோடி தான். ஆனால் தற்போது இருமடங்களாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது. எனவே லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போது 1000 ஆக உயர்த்த வேண்டும். அதுபோல் மாநிலங்களவை இடங்களையும் பலப்படுத்த வேண்டும்" இவ்வாறு கூறினார்.

English summary
Former president Pranab Mukherjee pitched for raising the number of Lok Sabha seats to 1,000 from the existing 543
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X