டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்.. நுரையீரலில் புதிய தொற்று.. மருத்துவர்கள் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளதாகவும் அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி (84). இவருக்கு கடந்த 10-ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Pranab Mukherjees condition worsens, says RR Hospital

அங்கு அவருக்கு மூளையில் இருந்த ரத்த கட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது.

இந்த நிலையில் இதுகுறித்து டெல்லி ராணுவ மருத்துவமனை கூறுகையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

Recommended Video

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை

    எஸ்பிஐ ஏடிஎம்மில் சூப்பர் பாதுகாப்பு வசதி.. டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? எஸ்பிஐ ஏடிஎம்மில் சூப்பர் பாதுகாப்பு வசதி.. டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

    அவரை மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது. அவரது நுரையீரலில் புதிதாக தொற்று ஏற்படத் தொடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்கள்.

    இந்த நிலையில் பிரணாபின் மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தந்தை பிரணாப்பின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    EX President of India Pranab Mukherjee's health condition worsen as his lungs gets infected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X