டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரிசோதனையை இப்படி அதிகரித்து இருந்தால்.. பிரசாத் கிஷோர் வெளியிட்ட புள்ளி விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகள் பணிகளை செய்து வரும் பிரசாத் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை குறிப்பிட்ட அளவு அதிகரித்து இருந்தால் கொரோனா தொற்று விகிதமும், உயிரிழப்பும் பெருமளவு குறைந்திருக்கும் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கிய மார்ச் 20ம் தேதி தொடங்கி எப்ரல் 24ம் தேதி வரையிலான நிலவரத்தை வெளியிட்டுள்ளார்.

prashant kishor listed the details of of covid 19 test in india

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவலைகளை அடிப்படையாக வைத்து கீழ் கண்ட் புள்ளி விவரங்களை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை- 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா- மத்திய அரசு இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை- 24 மணிநேரத்தில் 1,396 பேருக்கு கொரோனா- மத்திய அரசு

அந்த புள்ளி விவர பட்டியலின் படி "மார்ச் 20ம் தேதி 14376 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 191 பேருக்கு கொரோனா இருந்தது. அதாவது 1.33 சதவீதம் அளவுக்கு கொரோனா இருந்தது. அப்போது 4 பேர் உயிரிழந்திருந்தனர்

prashant kishor listed the details of of covid 19 test in india

ஏப்ரல் 19ம் தேதி நிலவரப்படி 383985 பேருக்கு சோதனை செய்யப்பட்டிருந்தது. இதில் 17615 பேருக்கு கொரோனா பரவி இருந்தது. 519 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் அதே ஏப்ரல் 19ம் தேதி 139092 பேருக்கு சோதனை செய்திருந்தால் 6800 பேருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் 166 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 24ம் தேதி நிலவரப்படி 541789 பேருக்கு கொரோனா பரிசோதனை நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதில் 24593 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது என்றும் 779 பேர் உயிரிழந்திருந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் 24ம் தேதிக்குள் 157804 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருந்தால் 6978 பேருக்குத்தான் கொரோனா பரவி இருக்கும் என்றும் 260 பேர் மட்டுமே இறந்திருப்பார்கள் என்றும் பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட புள்ளி விவர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

prashant kishor listed the details of of covid 19 test in india

இதற்கிடையே ஐசிஎம்ஆர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை 665819 சாம்பிள்களை பரிசோதனை செய்திருப்பதாக கூறியுள்ளது. மத்திய அரசு இன்று மாலை வெளியிட்டுள்ள தகவலின் படி 27892 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 872 பேர் உயிரிழந்துள்ளனர். 6184 பேர் குணம் அடைந்துள்ளனர். 20835 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Recommended Video

    கொரோனாவுக்கு புதிதாக 6 அறிகுறிகள் சேர்ப்பு

    English summary
    prashant kishor on twitter: For all the technical jargons and selective use & interpretation of data, the HARD FACT is the rate of growth of #Corona cases in India has seemingly slowed BECAUSE the rate at which we were increasing our testing is now half of what it used to be in early April
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X