டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீங்க என்ன நினைத்தாலும் சரி.. அடுத்த 30 ஆண்டுகள் பாஜகவை சுற்றித் தான்!" காரணத்துடன் விளக்கும் பிகே

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பாஜக குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தலைமையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?

மேலும், கட்சி ரீதியாகவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு வெளியே மட்டுமின்றி கட்சிக்குள்ளேயும் குரல்கள் எழுந்தன.

 பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

இந்தச் சூழலில் தான், கடந்த மாதம் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை முன்மொழிந்து இருந்தார். அவரது திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது நடக்காமல் போனது.

 வரும் காலம்

வரும் காலம்

இதையடுத்து அவர் பீகார் மாநிலத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குவார் எனக் கூறப்பட்டது. மேலும், அங்கு மாபெரும் யாத்திரையை ஒன்றையும் அவர் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்று சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், இந்தியாவில் வரும் காலத்தில் அரசியல் எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

கணிப்பு

கணிப்பு

வரவிருக்கும் 20-30 ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் பாஜகவைச் சுற்றியே சுழலும் என்றும் ஒன்று பாஜகவுடன் இருக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இந்த நேரத்தில் வெற்றிகரமாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்த பிகே, வெற்றி என்பது நாம் எவ்வளவு பேரின் வாழ்க்கையைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பது தான் என்றும் அவர் தெரிவித்தார்.

 அந்த 30 சதவிகிதம்

அந்த 30 சதவிகிதம்

இது குறித்து பிரசாந்த் கிஷோர் மேலும் கூறுகையில், "தேர்தல் ரீதியாக பாஜக மிகவும் வலுவான கட்சியாக மாறியுள்ளது. இந்தியாவில் 30 சதவீத வாக்குகளைப் பெற்றால் போதும், நீங்கள் பல ஆண்டுகள் இங்கு நீடிக்கலாம். மேலே சென்ற எந்தப் பொருளும் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்ற பழமொழி நீண்ட கால நோக்கில் உண்மையாக இருக்கலாம்.

 பாஜகவை சுற்றியே

பாஜகவை சுற்றியே

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு எப்படி 40-50 ஆண்டுகள் காங்கிரஸைச் சுற்றியே அரசியல் சுழன்றதோ.. அதேபோல அடுத்த 20-30 ஆண்டுகளுக்கும் இந்திய அரசியல் பாஜகவைச் சுற்றியே இருக்கும். நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 1977ஐ தவிரச் சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகள் எந்தவொரு தேசிய கட்சியாலும் காங்கிரஸுடன் போட்டியிட முடியவில்லை.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வீழ்த்துவது என்பது நீண்ட கால நடவடிக்கை. சரியான விஷயங்களைச் செய்யாவிட்டால், அடுத்த பல ஆண்டுகளுக்கு எந்த எதிர்க் கட்சியும் அல்லது கூட்டணியும் இந்தியா முழுவதும் வர முடியாது. 1984ஆம் ஆண்டு பின்னர் எந்தவொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஆட்சியை அமைக்க முடியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது என்று நீங்கள் கூறலாம். ஆனால் அதுவும் கூட்டணி அரசு என்பதை மறந்துவிடக் கூடாது என்ரார்

English summary
Election strategist Prashant Kishor has said that for the coming 20-30 years, the politics of the country will revolve around the BJP: (இந்தியாவில் வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பது குறித்துத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்) Prashant Kishor's opnion about Congress party's future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X