"பிகே எங்களுடன் தான் இருக்கிறார்!" சொல்கிறார் மம்மா பானர்ஜி.. காங்கிரஸுக்கு நோ சொல்ல இதான் காரணமா
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்று பல வியூகங்கள் எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா இது தொடர்பாக சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்,
கடந்த 2014ஆம் ஆம்டு மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது முதலே, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்விகளையே சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியை இழந்தது.
3 அமைச்சர்கள்.. அப்பறம் உதயநிதி.. பக்கா பிளானோடு குதித்த திமுக! வடக்கிலிருந்து வந்த டாப்
குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.

பிகே
இந்தச் சூழலில், கடந்த வாரம், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். 2024ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாகவும் அதற்கான திட்டத்தையும் பிகே காங்கிரஸ் தலைமையிடம் முன்மொழிந்து இருந்தார். பிகே விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது,

இணைய மறுப்பு
இந்த குழு சமீபத்தில் தான் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் நடந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்குழுவில் இணைந்து பணியாற்ற பிகே மறுத்துவிட்டதாகவும் சுர்ஜேவாலா குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள்
பிகே திட்டம் குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட குழு, அவர் கட்சியில் இணைவதற்கோ அல்லது தேர்தலில் பணியாற்றுவதற்கோ பெரியளவில் எதிர்ப்பு தெரிவில்லை. இருப்பினும், அவர் இனிமேல் எந்தக் கட்சியிலும் இணைந்து பணியாற்றக் கூடாது என்ற நிபந்தனையை மட்டும் வைத்திருந்தது. இதனிடையே கட்சியின் ஒரு பிரிவினர், டிஆர்எஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸுடன் ஐபேக் போட்டுள்ள ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி, பிகே மீது சந்தேகத்தை எழுப்பினர்.

மம்தா பானர்ஜி
இந்நிலையில், பிகே விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், "இதே கவலையை மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பினர். ஆனால் இந்த விவகாரத்தில் அவரது நிலையைத் தெளிவுபடுத்தி விட்டோம். வரும் காலத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் அவருடன் இணைந்தே பணியாற்றும். அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்" என்றார்.

தீவிர ஆலோசனை
கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு பிரசாந்த் கிஷோரின் பங்கும் முக்கியமானது. தேர்தல் வெற்றிக்குப் பிறகும் கூட பிகே திரிணாமுல் கட்சியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். வரும் 2024 பொதுத்தேர்தலில் மம்தா பானர்ஜியை முன்னிறுத்திச் சந்திக்கலாமா என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏன் மறுத்தார்
பிகே காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டதட்ட உறுதி என்றே சொல்லப்பட்டது. இந்த சூழலில் அவர் திடீரென காங்கிரஸ் கட்சியின் அழைப்பை நிராகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியில் மிகப் பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்யக் கட்சியின் தலைமை தயாராக இல்லை என்றும் இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் அழைப்பை பிகே நிராகரித்தார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.