India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படிப்போடு... புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்? இது செம ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கக் கூடும் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்.. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு பெயராகிவிட்டது. பிரதமர் மோடியின் தேர்தல் வியூக வல்லுநராக வெற்றி வாகை சூடியது முதல் நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் எனும் பிகேதான் ஆஸ்தான ஆலோசகர். தேர்தல் களத்தில் பிகேவும் அவரது டீமும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையை அரசியல் கட்சிகள் வைத்திருக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி என ஆகப் பெரிய ஆளுமைகள் எல்லாம் அரியாசனத்தை பிகே உதவியுடனேயே கைப்பற்றி இருக்கின்றன. உ.பி தேர்தல் களத்தில் காங்கிரஸூக்கு ஆலோசனை வழங்கிய போது அவரால் வெல்ல முடியாமல் போன சில நிகழ்வுகளும் இருக்கின்றன.

சான்ஸ்.. பாஜகவை தோற்கடிக்க இதுதான் ஒரே வழி.. காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர் பரபர பேட்டிசான்ஸ்.. பாஜகவை தோற்கடிக்க இதுதான் ஒரே வழி.. காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர் பரபர பேட்டி

காங்கிரஸ்- பிகே

காங்கிரஸ்- பிகே

இப்போது கூட 2023-ம் ஆண்டுக்கான தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிகேவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பிகேவை கட்சிக்குள் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் செய்ததது. ஆனால் காங்கிரஸின் முயற்சிகள் பலன் தரவில்லை. காங்கிரஸில் தாம் இணையப் போவதில்லை என திட்டவட்டமாக பிகே அறிவித்துவிட்டார்.

பிகே நிலைப்பாடுகள்

பிகே நிலைப்பாடுகள்

பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டாகவே பல்வேறு முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்து வந்தார். அவர் ஒரு புரியாத புதிராக அதே நேரத்தில் பாஜக எதிர்ப்பு அணி என்பதில் உறுதியானவராகாவும் இருந்தார். மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த உடனேயேம் இனி அரசியல் பணிகளில் ஈடுபடப் போவது இல்லை என கூறியிருந்தார் பிகே. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் இணைந்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி முயற்சிகளை முன்னெடுத்தார். காங்கிரஸுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இப்போது காங்கிரஸுக்கு குட்பையும் சொல்லிவிட்டார். இந்த நிலையில் பிகே அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்கிற கேள்வி எழுந்தது.

புரியாத புதிராக ட்வீட்

புரியாத புதிராக ட்வீட்

தற்போது இதற்கு சூசகமாக பதிலளித்துள்ளார் பிகே. அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், மக்களிடம் நேரடியாக செலல் வேண்டிய தருணம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கப் போகிறேன். பீகாரில் இருந்து இந்த பயணம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது பிகே அரசியல் கட்சி ஒன்றை பீகாரில் தொடங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

பிகேவின் அரசியல் கட்சி?

பிகேவின் அரசியல் கட்சி?

பிகே தொடங்கும் அரசியல் கட்சி குறித்து விவாதங்களும் எழுந்துள்ளன. காங்கிரஸூக்கு எதிராக மிதவாத வலதுசாரிகள் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினர். அப்போது ஆம் ஆத்மி கட்சி குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகவில்லை. ஆனால் இப்போது டெல்லி, பஞ்சாப் என தன்னுடைய சாம்ராஜ்யத்தை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது ஆம் ஆத்மி. அடுத்ததாக குஜராத் மாநிலத்தையும் இலக்கு வைத்துள்ளது ஆம் ஆத்மி. அதே பாணியில் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதாக சொல்லும் பிகே தொடங்கப் போகும் கட்சியும் சாதிக்குமா? என்பது எதிர்பார்ப்பு.

English summary
Sources said that Poll strategist Prashant Kishor may launch political party from Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X