டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் கிஷோர் கூறிய "அந்த" அட்வைஸ்.. ஆம் ஆத்மியின் மாஸ் வெற்றிக்கு இதுவும் காரணம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒரே ஒரு அறிவுரையை வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வந்தது. இவ்வளவு ஏன் எக்சிட் போல் முடிவுகளை வைத்து நேற்று இரவு முதலே ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் வரத் தொடங்கினர்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி 62 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பாஜகவோ 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    யோகி முதல் அமித் ஷா வரை.. தோல்வி அடைந்த யுக்தி.. 'அந்த' சக்ஸஸ் பார்முலாவில் சறுக்கல்.. என்ன நடந்தது?யோகி முதல் அமித் ஷா வரை.. தோல்வி அடைந்த யுக்தி.. 'அந்த' சக்ஸஸ் பார்முலாவில் சறுக்கல்.. என்ன நடந்தது?

    டெல்லி மக்களும்

    டெல்லி மக்களும்

    இந்த முன்னிலை நிலவரங்கள் வரும் போதே அரசியல் ஆலோசகரும் அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டவருமான பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டார். அதில் அவர் கூறுகையில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.

    பிரசார யுக்தி

    பிரசார யுக்தி

    இதையடுத்து பிற்பகல் 3 மணி அளவில் கட்சி அலுவலகத்திற்கு பிரசாந்த் கிஷோர் வருகை தந்தார். அங்கிருந்த கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இருவரும் கட்டி அணைத்து அன்பை பரிமாறி கொண்டனர். அதாவது டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரும் உதவியுள்ளார். கெஜ்ரிவாலுக்காக பிரசார யுக்திகளை வகுத்து கொடுத்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி

    பிரதமர் நரேந்திர மோடி

    இதற்கான ஒப்பந்தத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட்ட போது கெஜ்ரிவாலுக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டும் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது எதிர்க்கட்சிகளுடன் மோதல் மனப்பான்மையை கைவிட கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்.

    25 ஆயிரம் புத்தகங்கள்

    25 ஆயிரம் புத்தகங்கள்

    அப்போதுதான் பாஜகவுக்கு வாக்களிக்க நினைப்பவர்களும் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பர். எனவே தான் மக்களுக்கான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நபர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவாலுக்கு பிகே அறிவுரை வழங்கினார்.
    இந்த அறிவுரையின் படி கெஜ்ரிவால் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது இலவச பேருந்து பயணம் ஆகிய திட்டங்களை அறிவித்தார். தேர்தல் அறிவிப்புகள் வந்தவுடன் கெஜ்ரிவாலின் சாதனை விளக்க புத்தகங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்பட்டது.

    English summary
    Here is the only advice given to Aravind Kejriwal by political Strategist Prashant Kishore, Sources say.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X