டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: தத்ரா நாகர் ஹைவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

குஜராத் அருகே அடுத்தடுத்து உள்ளவை தத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள். 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் ஒரே யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

President gives assent to Dadra and Nagar Haveli & Daman and Diu merger

கடந்த மாதம் லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் மெக்வால் இதனை தெரிவித்து இருந்தார்..பின்னர் லோக்சபாவில் இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதிஎதிர்க்கட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள், சிறுபான்மையினர் பயப்படாதீர்கள்: லோக்சபாவில் அமித் ஷா உறுதி

தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களை இணைப்பதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு வழங்கினார். இனி தத்ரா நாகர் ஹைவேலி- டாமன் டையூ என ஒரே யூனியன் பிரதேசமாக இது அழைக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதால் மொத்த யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆனது. தற்போது 8 ஆக குறைந்துள்ளது.

English summary
President Ramnath Govind gives his assent to the Dadra and Nagar Haveli & Daman and Diu (Merger of Union Territories) Bill, 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X