டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா எம்பியாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம்!

Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபா எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

நாட்டின் வடகிழக்கு மாநிலத்தில் இருந்து முதல் முறையாக இந்திய நீதித்துறையின் உயரிய இடமான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ரஞ்சன் கோகாய். உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

President nominates former CJI Ranjan Gogoi to Rajya Sabha

2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி முதல் 2019 நவம்பர் 17-ந் தேதி இப்பதவியில் ரஞ்சன் கோகாய் இருந்தார். அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

கொரோனா: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை- ஷாஹின் பாக் போராட்டத்துக்கு நெருக்கடிகொரோனா: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை- ஷாஹின் பாக் போராட்டத்துக்கு நெருக்கடி

இந்த நிலையில் ரஞ்சன் கோகாயை ராஜ்யசபா எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்திருக்கிறார். ராஜ்யசபாவில் 1 நியமன எம்பி பதவி காலம் முடிவடைவதால் அந்த இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

President nominates former CJI Ranjan Gogoi to Rajya Sabha

ராஜ்யசபாவில் 12 எம்.பி.க்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு உண்டு.

English summary
President Ram Nath Kovind on Monday nominated former Chief Justice of India Ranjan Gogoi to the Rajya Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X