டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. பிரதமர் , எம்பிக்கள் ஊதியத்தில் 30% பிடித்தம்.. 2 ஆண்டு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி கட்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா எதிரொலியாக பிரதமர் உள்பட எம்பிக்கள் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    இதுதான் கொரோனா பரவும் பேட்டர்ன்... மத்திய அரசு அதிரடி

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    President, PM, Ministers, MPs salary will be cut into 30%

    கொரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் உள்பட எம்பிக்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போல் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்பிக்களின் ஊதியத்திலிருந்தும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் நடைமுறை ஓராண்டுக்கு அமலில் இருக்கும். எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது. இதனால் எம்.பி.க்களின் தலா ரூ.10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.

    இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் அரசுக்கு ரூ.7,900 கோடி நிதி சேமிக்கப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    English summary
    The Salaries of President, PM, Ministers, MPs will be cut into 30% for one year. The amount will be added to Corona fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X