டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம்.. குடியுரசுத் தலைவர் ஒப்புதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 13-12-2019 | Morning News | oneindia tamil

    டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியா வந்துள்ள இந்துக்கள், புத்தர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள் உள்பட ஆறு சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது.

    President Ram Nath Kovind gave assent to the Citizenship (Amendment) Bill, 2019, becomes Act

    இதையடுத்து புதன்கிழமை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வியாழக்கிழமை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

    சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது.. உடலில் கொழுப்பு குறையும்.. பாஜக எம்பி

    இந்த மசோதாவுக்கு குடியுரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துளளது.

    இந்த சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்துக்கள், புத்தர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள் ஆகியோர் 31 டிசம்பர் 2014க்க முன்பு இந்தியாவில் குடியேறி இருந்தால் அவர்கள் சட்ட விரோத குடியேறிகளாக கருதப்படமாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். இது தொடர்பான கணக்கெடுப்பு அடுத்த ஒரு வருடம் நடைபெற உள்ளது.

    English summary
    President Ram Nath Kovind gave assent to the Citizenship (Amendment) Bill, 2019, turning it into an Act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X