டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாய், ஹிராபென்-னை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை காலை காந்திநகர் அருகே உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இரண்டு நாள் குஜராத் பயணத்தின் இரண்டாவது நாளில், குடியரசு தலைவரும், அவரது மனைவி சவிதா கோவிந்தும் பிரதமரின் தாயை ரைசன் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு ஹிராபென் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார்.

President Ram Nath Kovind meets PM Modis mother Hiraben in Gujarat

குடியரசு தலைவர் தம்பதி, மோடி தாயாருடன் அரை மணி நேரம் செலவிட்டனர். பின்னர், ராம்நாத் கோவிந்தும் அவரது மனைவியும் கோபா பகுதியில் அமைந்துள்ள, மகாவீர் ஜெயின் ஆரதான மையத்திற்கு சென்றனர். அங்கு, ஆச்சார்யா ஸ்ரீ பத்மசாகர்சுரிஜியின் ஆசீர்வாதம் பெற்றனர்.

அவர்களை முதல்வர் விஜய் ரூபானி அங்கு வரவேற்றார். முன்னதாக, ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சனிக்கிழமை அகமதாபாத் வந்தடைந்தனர். அவர்கள் இரவில் ராஜ் பவனில் தங்கினர். ஆளுநர் ஆச்சார்யா தேவ் விரத் அவர்களை வரவேற்றார்.

English summary
President Ram Nath Kovind met Prime Minister Narendra Modi's mother Hiraben at her residence near Gandhinagar on Sunday morning. On the second day of his two-day Gujarat visit, the president and his wife Savita Kovind met the prime minister's nonagenarian mother at her residence in Raisan village, where she lives with her younger son Pankaj Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X