டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அருமையான திருக்குறளை சொல்லி.. பட்ஜெட் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020 : Nirmala Sitharaman will launch the budget today

    டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி 11ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது.. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் தாக்கப்படும் விஷயங்கள், அரசு கடந்த ஓராண்டில் செலவு செய்த விஷயங்கள், இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது

    president ram nath kovind on thirukkural in tamil at budget session speech

    ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி தனது உரையை தொடர்ந்தார்.

    அந்த திருக்குறளின் அர்த்தம் "உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே" என்பதாகும். இதன் மூலம் உழவுத்தொழிலின் மேன்மையை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

    வன்முறை போராட்டங்களால் நாடு பலவீனமடைந்துவிடும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்வன்முறை போராட்டங்களால் நாடு பலவீனமடைந்துவிடும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக வேதனை தெரிவித்த அவர், வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும் என்று எச்சரித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் பொருட்களையே வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    budget 2020: president ram nath kovind on thirukkural in tamil at budget session speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X