டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

Google Oneindia Tamil News

Recommended Video

    Supreme Court dismisses curative petition of two convicts

    டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    2012-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிர்பயா உயிரிழந்தார்.

    MHA sends mercy Petition of Mukesh to Rashtrapati Bhavan

    நாடு முழுவதும் இக்கொடூர சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு வரும் 22-ந் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

    இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி கருணை மனு அனுப்பினார். இக்கருணை மனு மீது முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே முகேஷின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது. தற்போது இக்கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தற்போது கருணை மனு நிராகரிக்கப்பட்டதல் 14 நாட்களுக்குப் பிறகே 4 பேரையும் தூக்கிலிட முடியும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

    English summary
    Ministry of Home Affairs had sent the mercy petition of 2012 Delhi gang-rape case convict Mukesh to Rashtrapati Bhavan, last night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X