டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எளிமை..! அப்துல் கலாம் வழியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.. சொந்த ஊருக்கு ரயிலில் பயணம்

Google Oneindia Tamil News

டெல்லி: அப்துல் கலாமைப் போலவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரயில் மூலம் தனது சொந்த ஊரான கான்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது பல சந்தர்ப்பங்களில் அவர் ரயில் மூலம் பயணித்துள்ளார்.

2003, 2004, 2006 ஆண்டுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர் ரயிலில் பயணித்துள்ளார். அதன் பிறகு எந்த குடியரசுத் தலைவரும் ரயிலில் பயணித்ததில்லை.

ஜூலை 1முதல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம், செக் புக் கட்டணம் மாற்றம்.. புதிய விதிமுறைகள்! ஜூலை 1முதல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம், செக் புக் கட்டணம் மாற்றம்.. புதிய விதிமுறைகள்!

15 ஆண்டுகளில் முதல் முறை

15 ஆண்டுகளில் முதல் முறை

இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்முறையாக ரயில் மூலம் பயணித்துள்ளார். அவர் டெல்யில் இருந்து சிறப்பு ரயில் மூலம் கான்பூருக்கு பயணிக்கிறார். 14 பெட்டிகள் கொண்ட இந்த ஜனாதிபதி எக்ஸ்பிரஸில் குடியரசுத்தலைவருடன் அவரது மனைவி மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகை ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்புப் படை வீரர்களும் பயணிக்கின்றனர்.

சொந்த ஊர்

சொந்த ஊர்

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு நான்கு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் சென்றுள்ளார். இந்த நான்கு நாட்களில் தனது சொந்த ஊரை தவிர அவர் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து அவர் வரும் ஜூன் 27ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனதிபதி எக்ஸ்பிரஸ்

ஜனதிபதி எக்ஸ்பிரஸ்

உத்தரப் பிரதேசத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஜூன் 28ஆம் தேதி தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். இந்த ஜனாதிபதி சிறப்பு ரயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்க ஏதுவாக குண்டு துளைக்காத சிறப்புப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டி 2 படுக்கை அறை, 2 கழிவறைகள், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.

முதல்முறையாகும்

முதல்முறையாகும்

குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு ராம்நாத் கோவிந்த தனது சொந்த ஊருக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். உத்தரப் பிரதேசத்தில் நான்கு நாட்கள் அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Ram Nath Kovind started his train journey to his hometown in Kanpur on a special presidential train. After Abdul Kalam, he is the first president to travel in train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X