டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொதுத்தேர்தலில் தவறாது வாக்களியுங்கள்.. குடியரசு தின உரையில் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

டெல்லி:17வது லோக்சபா பொதுத் தேர்தலில் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

70வது இந்தியக் குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்துக்கு முன்தினம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.

அதனை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு குடியரசு தின சிறப்பு உரையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குடியரசு தினம் இந்திய குடிமக்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை நினைவுகூரும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

தியாகிகளை நினையுங்கள்

தியாகிகளை நினையுங்கள்

விடுதலைக்காக உயர்நீத்தவர்களை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்க வேண்டும். காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை நாம் போற்ற வேண்டும். இந்த ஆண்டு சுதந்திர தினமும் நமக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைய உள்ளது.

காந்தியின் கொள்கைகள்

அக்டோபர் 2ம் தேதி மகாத்மாக காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறோம். அவரது கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்த இது சரியான தருணம்.

இந்தியா புரட்சி

இந்தியா புரட்சி

டிஜிட்டல் தொடர்பு அளிப்பதில் இந்தியா பெரும் புரட்சியை நிகழ்த்தி உள்ளது. இந்திய விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். உயர் கல்வி நிறுவனங்களில் பதக்கங்களை பெறுவதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் உள்ளனர்.

தலைமை பதவிகளில் பெண்கள்

தலைமை பதவிகளில் பெண்கள்

இன்று கல்வி, மருத்துவம், கலை, விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் பெண்கள் தலைமைப் பதவி வகித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.2019ம் ஆண்டில் இந்தியக் குடிமக்கள் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான பொறுப்பு காத்திருக்கிறது.

வாக்களிக்க வேண்டுகோள்

17வது லோக்சபா தேர்தலில் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். 21வது நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது கூடுதல் சிறப்பு என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.

English summary
President Ram Nath Kovind urges people to vote during upcoming Lok Sabha polls in his Republic Day address. Republic Day is an opportunity for all citizens of the country to remember independence, equality and brotherhood he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X