டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Padma Awards 2019: பங்காரு அடிகளார், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள்.. குடியரசு தலைவர் வழங்கினார்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்றைய தினம் குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது.

கலை, இலக்கியம், சமூகசேவை, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இவை பத்மவிபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.

President Ramnath Govind confers Padma Awards for 48 personalities

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. முதல் கட்டமாக 48 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

5 முறை தேசிய விருது பெற்ற மோகன்லாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், அறுவை சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவ நிபுணர் ஆர்.வி. ரமணி, டிரம்ஸ் கலைஞர் சிவமணி, நாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், நடிகர் பிரபுதேவா, பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, முன்னாள் வெளியுறவுத் செயலர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு

மறைந்த கவிஞர் குல்தீப் நய்யாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதை அவரது குடும்பத்தினர் பெற்று கொண்டனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குல்தீப் குடும்பத்தினர் இந்த விருதை பெற மறுப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ளவர்களுக்கு மார்ச் 16-ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும் என குடியரசு தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

English summary
President Ramnath Govind confers Padma Awards for 48 personalities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X