டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாஜ்பாய் 95-வது பிறந்த நாள்- லக்னோவில் 25 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் லக்னோவில் வாஜ்பாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

வாஜ்பாயின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

President Ramnath Kovind, PM Modi pay tributes on Vajpayees birth anniversary

இதில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். மேலும் உத்தரப்பிரதேசம் லக்னோவில் இன்று நடைபெற்ற வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அங்கு லோக் பவனில் வாஜ்பாயின் 25 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செல்லுத்தினார். இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

President Ramnath Kovind, PM Modi pay tributes on Vajpayees birth anniversary
English summary
President Ramnath Kovind,Prime Minister Narendra Modi and others paid tribute to former PM Atal Bihari Vajpayee on his birth anniversary
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X