டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மா கருணை மனு நிராகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

President rejects mercy plea of convict Vinay Sharma in Nirbhaya Case

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால் நிர்பயா குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதேபோல் ஜனாதிபதிக்கும் கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இதனால் அவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு இன்று காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 4 குற்றவாளிகளுக்கும் ஒரே நேரத்தில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்; ஆகையால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிப்பதாக டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார்.

English summary
President Ram Nath Kovind has rejected a mercy petition filed by Vinay Sharma, one of convict in Nirbhaya Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X