டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் புதிய அமைச்சரவை.. முதல் நாளில் விவசாயிகள், வணிகர்களுக்கான எடுத்த சூப்பர் முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக பிரதமர் அலுலவத்துக்கு வந்தார். அங்கு தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்ட மோடி, புதிய கேபினட் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக நேற்று பதவி ஏற்றார். இதன்பின்னர் முதல்முறையாக பிரதமர் அலுவலகத்துக்கு வந்த மோடி, அங்கு மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் சிறிய சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தி தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

Prime Minister Modi chairs the first UnionCabinet meeting of his second term on his office

அதைத் தொடர்ந்து புதிய கேபினட் அமைச்சர்கள் அமர்ந்திருந்த அறைக்கு சென்ற அவர், அங்கு அமைச்சர்களுடன் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு நிதியி கீழ் உள்ள பிரதமர் உதவித்தொகை திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி முதல் முடிவினை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையே இன்று நடந்த ஆலோசனையில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களை பிரதமர் மோடியிடம் வெளிப்படுத்தினார்கள். பிரதமர் மோடியுடன் பல்வேறு தகவல்களை கூறி கேள்விகளை கேட்டார்.

சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்துககு பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 2 ஹெக்டேருக்குள் நிலம் வைத்துள்ள 12.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதேபோல் ,சிறுகுறு வணிகர்களுக்கு பென்சன் அளிக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பென்சன் திட்டத்தால் 3 கோடி வணிகர்கள் பயன்பெறுவார்கள்.

English summary
At the Prime Minister’s Office in South Block, PM Narendra Modi pays tributes to Mahatma Gandhi and Sardar Patel and then Prime Minister Narendra Modi chairs the first Union Cabinet meeting of his second term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X