டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: 14-வது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார் தலைநகர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜப்பானிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளை உள்ளடக்கியதே ஜி20 அமைப்பாகும். Group of Twenty என்பதையே சுருக்கமாக G-20 என அழைக்கிறோம்

Prime Minister Modi departs from Delhi for 2 days G20 conference in Japan

இந்த அமைப்பில் வளர்ச்சியடைந்த நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன

ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர், சீன அதிபர், அமெரிக்க அதிபர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் இந்தியா, ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி அளித்து வருகிறார். அவப்போது அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன பிற நாடுகள்.

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் போது இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்

இந்நிலையில் தற்போது ஜி-20 மாநாட்டின் போதும் சீன மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். சீனா ரஷ்யா இந்தியா நாடுகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ ரீதியான ஒத்துழைப்பு, சர்வதேச நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

English summary
Prime Minister Modi has left for Japan to attend the 14th G20 summit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X