டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன்?.. மோடி விளக்கம்- வீடியோ

    டெல்லி: ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது போல் தென்னிந்தியாவில் தான் போட்டியிடாதது ஏன் என்பது பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி தினத்தந்திக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இடம்பெற்றுள்ளது.

    நதி நீர் இணைப்பு.. ரஜினியின் பாராட்டை பாஜக ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா?.. பிரதமர் பதில் நதி நீர் இணைப்பு.. ரஜினியின் பாராட்டை பாஜக ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா?.. பிரதமர் பதில்

    நான் போட்டியிடவில்லை

    நான் போட்டியிடவில்லை

    கேள்வி: ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். வடஇந்தியாவை போன்றே, தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டு உள்ளார். இது போல் பிரதமரும் தென்பகுதியில் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க.வில் ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா, விவாதிக்கப்பட்டதா? கடந்த முறை நீங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டீர்களே?

    குழப்பிக் கொள்ள வேண்டாம்

    குழப்பிக் கொள்ள வேண்டாம்

    பதில்:- ஸ்மிருதி இரானி அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்த காட்சிகளை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அவர் (ராகுல் காந்தி) ஏன் வேறு ஒரு தொகுதியை நாடிச் சென்றார் என்று. அரசியலுக்காக ஏதேனும் ஒரு காரணத்தை கூறலாம். ஆனால், பாதுகாப்பு கருதியே, அவர் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களை அவர் தேர்வு செய்யவில்லை. கேரளாவை அவர் தேர்வு செய்ததால்தான் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது. எனது முடிவை எப்போதும் நான் எடுப்பதில்லை.. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். தேவையில்லாமல் யோசித்து நான் குழப்பி கொள்ள விரும்பவில்லை.

    தாக்கம்

    தாக்கம்

    கேள்வி:- ராகுல் மட்டுமல்லாது பிரியங்காவுக்கும் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

    பதில்:- இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அது அவர்களது குடும்ப கட்சி. எனவே அதனை காப்பாற்ற குடும்பத்தினர் பாடுபடுகின்றனர். செய்துதானே ஆக வேண்டும்.

    என்னவாக இருக்கும்

    என்னவாக இருக்கும்

    கேள்வி:- உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவின் தாக்கம் என்னவாக இருக்கும்?

    பதில்:- இதற்கு பதில் நான் முன்னதாக கூறி விட்டேன்.

    வெற்றிக்கு சிரமம்

    வெற்றிக்கு சிரமம்

    கேள்வி:- கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க. வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது ?

    பதில்:- இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா.ஜ.க. வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்தான் பா.ஜ.க. எம்.பி.க்களாக உள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

    தமிழகத்தில்

    தமிழகத்தில்

    நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.

    நட்பு கட்சி

    நட்பு கட்சி

    கேள்வி:- மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணிக்காக தி.மு.க.வை தவிர்த்து, அ.தி.மு.க.வை தேர்வு செய்தது ஏன்?

    பதில்:- அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. நாடாளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு.க.

    அதிமுகவுக்கு நிர்பந்தம்

    அதிமுகவுக்கு நிர்பந்தம்

    கேள்வி:- ஆனால் ஒரு சில கட்சிகள், அ.தி.மு.க.வை கூட்டணிக்காக நிர்ப்பந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனரே?

    பதில்:- அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் பா.ஜ.க.வுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது தான் உண்மை. ஆனால் பா.ஜ.க.வுடன், ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர் என்றார் மோடி.

    English summary
    Prime minister Narendra Modi explains why he has not contested in South India like Rahul contest in Vayanad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X