டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி !

Google Oneindia Tamil News

Recommended Video

    prime minister modi going to america

    டெல்லி: பிரதமர் மோடி ஐ.நா.பொதுசபையில் உரையாற்றுவதற்காக வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

    மோடி பிரதமராக 2-வது முறை பதவியேற்று 100 நாட்களை மட்டுமே கடந்துள்ள நிலையில் இதுவரை 9 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மாலத்தீவு, இலங்கை, பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், பிரான்ஸ், ஜப்பான், கிர்கிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியுள்ளார். அந்த வரிசையில் அமெரிக்காவும் இடம் பெற இருக்கிறது.

    prime minister modi going to america

    7 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் மோடி அங்கு பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். 22-ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    மோடியின் அமெரிக்க பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலகம் வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் 27-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்கும் மோடி தலைமை பண்புகள் குறித்து பேசவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலிருந்து கேமராமேன் ஆவிராஜுடன்.. நேரலை அக்கப்போர்கள்.. கதறும் நேயர்கள்!கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலிருந்து கேமராமேன் ஆவிராஜுடன்.. நேரலை அக்கப்போர்கள்.. கதறும் நேயர்கள்!

    இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொண்டு பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடி உலகம் சுற்றியதே 100 நாள் சாதனை என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்10-வது முறையாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி.

    English summary
    prime minister modi going to america
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X