டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2022ல் இந்தியாவில் ஜி20 மாநாடு... உலக தலைவர்களுக்கு அழைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜி 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு... 2022 ல் இந்தியாவில் நடக்கிறது

    டெல்லி: 2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்த உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    அர்ஜென்டீனா தலைநகரான பியூனஸ் அயர்ஸில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் இரு நாள் மாநாடு நடைபெற்றது. உலகின் 20 பெரிய பொருளாதாரமிக்க நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியாஉள்ளிட்ட நாடுகள் குழுவாக ஒன்றிணைந்து ஜி20 நாடுகள் உருவாகியுள்ளன.

     Prime Minister Modi has announced that the 2022 G-20 summit will be held in India

    அடுத்ததாக 2022ம் ஆண்டில் ஜி20 சர்வதேச மாநாட்டை இத்தாலி நாடு நடத்த இருந்தது. இந்த நிலையில், இந்தியாவுக்கு அந்த வாய்ப்பினை இத்தாலி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியாவுக்கு வரும்படி ஜி20 நாட்டு தலைவர்களை அழைக்கிறேன். அந்த ஆண்டில் இந்தியா தனது 75வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது.

    இந்த சிறப்புமிக்க ஆண்டில் உலக தலைவர்களை வரவேற்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாட்டிற்கு வாருங்கள். இந்தியாவின் செல்வந்த வரலாற்றையும், பன்முகத்தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மாநாட்டிற்குப் பிறகு, தென்னாப்பரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை சந்தித்து வருகிற இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். குடிரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவில்லை என்பதால் தென்னாப்பரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை அழைத்துள்ளார் மோடி.

    முன்னதாக, பொருளாதார மாற்றங்கள் தொடர்பாக, சர்வதேச ஒத்துழைப்புக்கான 9 அம்ச திட்டங்கள் அடங்கிய பரிந்துரைகளை ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி சமர்ப்பித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி மாநாட்டின் போது சந்தித்து பேசினார்.

    English summary
    2022 G-20 summit will be held in India, when it completes 75 years of independence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X