டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர்.. கேரளாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு.. எதுக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதில் கேரள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விட வீரியமாக உள்ளது. கொரோனா பாதிப்பு தினம், தினம் அதிகரித்து வருகிறது.

ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் நிறுவனர் அஜித்சிங் கொரோனாவால் காலமானார்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4.12 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,980 பேர் உயிரிழந்தனர்.

 கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் கொரோனவை விரட்டுவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவொக்சின், கோவிஷில்டு என்ற 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவ முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாவதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் முதலில் பல்வேறு மாநில மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

வீணாக்கிய மாநிலங்கள்

வீணாக்கிய மாநிலங்கள்

மேலும் பல்வேறு மாநிலங்கள் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை வீணாக்கி விட்டது தெரியவந்தது. தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள்தான் தடுப்பூசியை அதிகம் வீணடித்துள்ளன. அதே வேளையில் கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகியவை தடுப்பூசியை சிறிதளவும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பினராயி விஜயன் ட்வீட்

பினராயி விஜயன் ட்வீட்

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'கேரளாவுக்கு மத்திய அரசு இதுவரை 73.38 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைத்துள்ளது. டோஸ்கள் வீணாவதை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட டோஸ்களைவிட முன்கூட்டியே ஒவ்வொரு குப்பியிலும் கூடுதல் மருந்து இருக்கும். ஆனால், இந்த கூடுதல் மருந்தையும் நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். இதன்மூலம் 74.26 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நமது செவிலியர்கள் மிகவும் திறமையானவர்கள் என்று கூறி இருந்தார்.

மோடி பாராட்டு

மோடி பாராட்டு

இந்த பதிவினை மேற்கோள் கட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி கேரளாவை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ' தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதில் நமது(கேரளம்) சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் தடுப்பூசி வீணாவதைக் குறைப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
Prime Minister Modi lauded Kerala health workers and nurses for setting an example to other states in reducing vaccine wastage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X