டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்!

எரிசக்தி துறையில் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: எரிசக்தி துறையில் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்றும், நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்தியா எரிசக்தி கூட்டமைப்பு 4 வது கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று உரையாற்றினார்.. அப்போது அவர் பேசும்போது, இந்தியாவில் இயற்கை எரிப்பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார்.

Prime Minister Modi to inaugurate AMP address

எரிசக்தி துறையில் உலகின் 3-வது சந்தையாக இந்தியா இருப்பதாக கூறிய பிரதமர், நடப்பாண்டில் எரிசக்தி துறை பெரும் சரிவை கண்டுள்ளது என்றார்.

இந்தியாவின் எரிபொருள் தேவை வருங்காலங்களில் இரட்டிப்பாகும் என்றும், எல்இடி விளக்குகளின் பயன்பாட்டால் இந்தியா ரூ.24 ஆயிரம் கோடி வரை சேமித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். அதேபோல, பயணிகள் விமானங்கள், வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பதால் எரிபொருள் தேவையும் அதிகரிக்கும்.. எனவே நாடு முழுவதும் விலை பாகுபாடின்றி எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள் ராவணன் உருவபொம்மைக்கு பதில் மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை கொளுத்திய பஞ்சாப் விவசாயிகள்

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது, மேலும் உலக நலனை கருத்தில் கொண்டே இந்தியா எப்போதும் பணியாற்றி வருகிறது என்று மோடி தனது உரையின்போது குறிப்பிட்டார்.

English summary
Prime Minister Modi to inaugurate AMP address
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X