டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்... பிரதமர் மோடி உறுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்.. பிரதமர் மோடி உறுதி- வீடியோ

    டெல்லி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    டெல்லியில் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதில் எந்த தவறும் இல்லை என்றார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகள் எளிமையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது. முத்ரா திட்டத்தில் கடனை உடனடியாக வழங்கி வருகிறோம். வர்த்தகர்களுக்கு ரூ.1 கோடி வரையிலான கடனை வெறும் 59 நிமிடத்தில் கிடைக்க வழிவகை செய்துள்ளோம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

    பரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது பரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது

    வாழ்வாதாரம் சிறப்பு

    வாழ்வாதாரம் சிறப்பு

    இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வணிகர்கள் விளங்குவதாகக் கூறிய மோடி, வணிகர்களுக்கு கடந்த காலங்களில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், தமது 5 ஆண்டு கால ஆட்சியில் வணிகர்கள் வாழ்வாதாரம் சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டார்.

    2 மடங்கு அதிகரிப்பு

    2 மடங்கு அதிகரிப்பு

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும். வர்த்தகர்களுக்கு எந்த பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் உதவி அளிக்கப்படும். கடன் அட்டையும் அளிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டார். இல்லாவிட்டால், இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் 2 மடங்கு அதிகரித்து இருக்காது என்றார்.

    மோடி உறுதி

    மோடி உறுதி

    பதிவு செய்த வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பேரிடர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் கிரெடிட் கார்டு மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த நல வாரியம் அமைக்கப்படும் என்றும் மோடி உறுதியளித்தார்.

    77-வது இடம்

    77-வது இடம்

    மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உலக அளவில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தில் இருப்பதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு என்றும் தெரிவித்தார்.

    English summary
    Loans up to Rs 50 lakh for trader Says Prime Minister Narendra Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X