டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று நள்ளிரவுக்குப் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்படுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் செப்டம்பர் 27-ல் மோடி உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி இன்று நள்ளிரவு புறப்பட்டு நாளை பிற்பகல் அமெரிக்கா சென்றடைய உள்ளார். முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரை சென்றடைகிறார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து மோடி ஆலோசனை நடத்துகிறார்.

 Prime Minister Narendra Modi leaves for US trip on today

அவர்களிடம் இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுக்கிறார். பின்னர் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிறன்று டெக்சாஸ் செல்கிறார் மோடி. அங்கு இந்தியர்கள் மோடிக்கு மிக சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா!பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா!

அந்நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மோடியும் டிரம்ப்பும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன.

பின்னர் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து செப்டம்பர் 24 கருத்தரங்கில் மோடி உரையாற்றுகிறார்.

பின்னர் நியூயார்க் நகரில் செப்டம்பர் 27-ந் தேதி ஐநா சபை ஆண்டு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஐ.நா. சபை உரையை முடித்துவிட்டு அன்றே பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

பெருமித அறிக்கை

இதனிடையே தமது அமெரிக்கா பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தமது பயணத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளேன். ஹூஸ்டன் பயணம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அமெரிக்கா அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளையும் தாம் சந்தித்து பேச இருக்கிறேன் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Prime Minsiter Narendra Modi today leaves for the US Trip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X