டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தர பிரதேசத்தில் பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வாரணாசி கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.

உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ரோடு ஷோதான் இன்றைய டாப் செய்தி. தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் இந்த மிகப்பெரிய ரோட் ஷோவை நடத்தினார்.

Prime Minister Narendra Modi performs Ganga aarti in Varanasi

வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இவர் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார்.

பல லட்சம் தொண்டர்கள் புடை சூழ இந்த பேரணி நடந்தது. மாலை 5 மணியளவில் மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மோடி இந்த பேரணியை தொடங்கினார். இந்த ரோட் ஷோ கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.

வழியில் பல லட்சம் தொண்டர்கள் மோடியை காண்பதற்காக நின்று இருந்தார்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பாஜக தொண்டர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி வாரணாசி கங்கை நதியில் வழிபாடு நடத்தினார். சுமார் 30 நிமிடம் பிரதமர் மோடி அங்கு கங்கை நதியை வேண்டினார்.

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கு.. விசாரணை அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகல்! தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கு.. விசாரணை அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகல்!

இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தொண்டர்கள் பல லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாளை மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
Prime Minister Narendra Modi performs Ganga aarti at Dashashwamedh Ghat in Varanasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X