டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிகப் பெரிய வெற்றி! தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொன்ன பிரதமர் நரேந்திர மோடி! இமாச்சலும் ஓகே தானாம்!

Google Oneindia Tamil News

டெல்லி : குஜராத் மக்கள் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியுள்ளார்கள் எனவும் தேர்தலை அமைதியான முறையில் நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக குஜராத் இமாச்சல பிரதேஷ் சட்டமன்றத் தேர்தல்களும் டெல்லி மாநகராட்சி தேர்தலும் கருதப்பட்டது டெல்லி மாநகராட்சியை முதல்முறையாக ஆம் ஆத்மி பாஜகவிடமிருந்து கைப்பற்றியுள்ளது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் 182 சட்டசபை தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது

குஜராத் வெற்றியைக் கூட கொண்டாட முடியவில்லை! கட்சியை விட்டே தூக்கிருவேன்! கமலாயத்தில் சூடான அண்ணாமலை! குஜராத் வெற்றியைக் கூட கொண்டாட முடியவில்லை! கட்சியை விட்டே தூக்கிருவேன்! கமலாயத்தில் சூடான அண்ணாமலை!

 சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

இதேபோல் இமாச்சல சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 12ஆம் தேதி நடைபெற்றது. 62 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களமிறங்கினர். 68 இடங்களில் 35 இடங்களில் வெற்றிபெறும் கட்சியை இறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 12ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், 55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவின்போது 75.6% வாக்குகள் பதிவாகி இருந்தன.

குஜராத்

குஜராத்

இன்று காலை குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் போதே பாரதி ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே போட்டி எழுதியது குஜராத்தில் இருமலைப் போட்டியே இத்தனை ஆண்டு காலமாய் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஆமாட்மிக் கட்சியும் தேர்தலில் குறித்து இருந்தது ஆனால் பழைய சாதனைகளை முறியடித்து பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும் டெல்லியில் வென்ற ஆம் ஆத்மி, இமாச்சலில் வென்ற காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளன.

வரலாற்று வெற்றி

வரலாற்று வெற்றி

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 157 தொகுதிகளில் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 17 இடங்கள் கிடைக்கும் எனவும் 5 முதல் 6 இடங்களில் வெற்றி பெறலாம் என இறுதிக்கட்ட நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெருவெற்றியை பெற்று இருந்தாலும் குஜராத் வெற்றி தான் இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாங்கள் வெற்றி பெறுவோம் ஆனால் வரலாற்று வெற்றி தான் எங்களுக்கு தேவை எனக் கூறியிருந்த நிலையில் அதேபோல தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த குஜராத் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். குஜராத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் தொண்டர்களை சந்தித்தனர். ஏழு மணி அளவில் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

மக்களுக்கு நன்றி

மக்களுக்கு நன்றி

இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி," தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்தவரை எந்த வாக்கு சாவடிகளும் மறுவாக்கு பதிவு தேவையில்லை. இமாச்சலப் பிரதேச வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பாஜக மற்றும் காங்கிரசுக்கு இணையான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. குஜராத்தில் இந்த முறை நரேந்திர மோடியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று ஏற்கனவே குஜராத் மக்களிடம் கூறியிருந்தேன். நரேந்திர மோடியின் சாதனையை பூபேந்திரா முறியடிக்க நரேந்திர மோடி கடுமையாக உழைப்பேன் என்று உறுதி அளித்திருந்தேன். குஜராத்தில் அந்த வெற்றியை மக்கள் பரிசளித்திருக்கின்றனர். குஜராத் வரலாற்றில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியதன் மூலம் குஜராத் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இதனால் குஜராத் மக்களுக்கு நான் நன்றி இதனை தெரிவித்துக் கொள்கிறேன்" என பேசினார்.

English summary
Prime Minister Narendra Modi has said that the people of Gujarat have given a huge victory to the BJP and thanked the Election Commission for conducting the elections peacefully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X