டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை 'இந்தியா குளோபல் வீக் 2020': மாநாட்டில் முக்கிய உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: "இந்தியா குளோபல் வீக் 2020" என்ற பெயரில் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியாவின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார்.

உலக நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை ஈர்ப்பதற்காக இந்தியா சார்பில் இங்கிலாந்தில் வரும் ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை 'இந்தியா குளோபல் வீக் 2020': என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. வீடியோ கான்பிரஸ் வாயிலாக நடைபெற உள்ள மிகப்பெரிய சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

Prime Minister Narendra Modi to address global audience at India Global Week 2020

இந்த நிகழ்ச்சியில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தகவல் தொழில்நுட்ப மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பலர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவருவதால் இந்தியாவுக்கு ஏராளமான முதலீட்டு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள் உருவாகி வரும் சூழலில் "இந்தியா குளோபல் வீக் 2020" கருத்தரங்கு நடைபெறுவதால் முககியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

ரேசனில் நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள்.. மோடியின் அறிவிப்பு ஏழைகளுக்கு பயன்தருமா?ரேசனில் நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள்.. மோடியின் அறிவிப்பு ஏழைகளுக்கு பயன்தருமா?

இந்த நிகழ்ச்சயில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள், 250க்கும் மேற்பட்ட வணிகர்கள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான மனோஜ் லட்வா (இந்தியா இன்க் சிஇஒ) தெரிவித்தார்.

இங்கிலாந்து தரப்பில், இளவரசர் சார்லஸ் இந்த நிகழ்வில் சிறப்பு உரையை நிகழ்த்தவுள்ளார், வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், உள்துறை செயலாளர் பிரிதி படேல், சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் மற்றும் சர்வதேச வர்த்தக செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் கைத்ரி குமாரும் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தின் புதிய இந்திய தூதராக இவர் தான் பொறுப்பேற்கிறார்.

இந்தியா ஐஎன்சி நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் லட்வா இது குறித்து தெரிவிக்கையில், பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்த நிகழ்ச்சியில் பேசுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.உலகில் அளவில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடியின் பேச்சு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் குரலை உலகம் கேட்க இது சரியான தருணம், என்று கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாற்று பியூஸ் கோயல் இதில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 5000 உலக வல்லுனர்கள் பங்கேற்கிறார்கள். அதேபோல் 75+ நிகழ்வுகள் இதில் நடக்க உள்ளது. 250+ பேர் இதில் பேச உள்ளனர்.

English summary
Prime Minister Narendra Modi will make a major worldwide address, expected to focus on India's trade and foreign investment prospects, at India Global Week 2020 organised in the UK from Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X