டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி.... ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு

பிரதமர் மோடி இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆட்சி அமைக்க உரிமை கோரி, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார், நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவரிடம் நரேந்திர மோடி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன் 16-வது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மோடி வழங்கினார்.

Prime Minister Narendra Modi to call on President Ram Nath Kovind later

17வது லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைகிறது. இதன் மூலம் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அரியணை ஏறுகிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முடிந்ததை அடுத்து கடந்த மாதம் தேர்தல் தொடங்கியது. ஏப்ரல் 11 தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

Prime Minister Narendra Modi to call on President Ram Nath Kovind later

நடந்து முடிந்த இந்த 17வது லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளின்படி பாஜக மொத்தம் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் வென்றது.

அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... !! அதுக்குள்ளயுமா.. பிரதமர் மோடியின் வெளிநாட்டு டூர் விபரம் இதோ... !!

இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து முதல்முறை ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும். இந்தநிலையில், பாஜக எம்பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நரேந்திர மோடி சந்தித்தார்.

English summary
Narendra Modi met with President Ramnath Kovind in New Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X