டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi was on a state visit to the three countries

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணமடைந்தபோது பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப் பயணத்தில் இருந்தார். இந்த நிலையில், நாடு திரும்பியதும் முதல் பணியாக, ஜெட்லி இல்லத்திற்கே சென்று, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் மோடி.

    பிரதமர் மோடி பிரான்ஸ்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இருந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, அருண் ஜெட்லி கடந்த சனிக்கிழமை காலை, மரணமடைந்தார்.

    இந்த ​​செய்தி கிடைத்ததும், தாயகம் திரும்ப மோடி திட்டமிட்டார். ஆனால், ஜெட்லியின் குடும்பத்தினர், நாட்டுக்கான பணியில் இருக்கும்போது பாதியில் திரும்ப வேண்டாம் என மோடியிடம் கேட்டுக் கொண்டனர்.

    நாடு திரும்பினார்

    நாடு திரும்பினார்

    ஜெட்லியின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன. இந்த நிலையில், இன்று காலை, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருந்து திரும்பினார் பிரதமர் மோடி. இதையடுத்து மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெற்கு டெல்லியில் உள்ள ஜெட்லியின் வீட்டிற்குச் சென்று அவரின், மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தித்து பேசினர்.

    மரியாதை

    மரியாதை

    ஜெட்லி வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி. முன்னதாக ஜெட்லி மறைவையடுத்து, டுவிட்டர் வழியாக, தனது இரங்கலை மோடி தெரிவித்திருந்தார்.

    மரியாதை

    மரியாதை

    ஜெட்லி வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி. முன்னதாக ஜெட்லி மறைவையடுத்து, டுவிட்டர் வழியாக, தனது இரங்கலை மோடி தெரிவித்திருந்தார்.

    உருகிய மோடி

    உருகிய மோடி

    பஹ்ரைனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தனது உரையின் போது உணர்ச்சிவசப்பட்டு, "எனது நண்பர் அருண்" உலகை விட்டு சென்றபோது இவ்வளவு தொலைவில் நான் இருக்க வேண்டியதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று உருக்கமாக தெரிவித்தார்.

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    நான் கடமைக்கு கட்டுப்பட்ட ஒரு மனிதன். பஹ்ரைனில் உற்சாகமான சூழல் இருக்கும் நேரத்தில், நம் நாடு கிருஷ்ண ஜென்மாஷ்டமியைக் கொண்டாடும் ஒரு நல்ல நேரத்தில், நான் இங்கே என் இதயத்தில் ஆழ்ந்த துக்கத்துடன் இருக்கிறேன். நான் பொது வாழ்க்கையில் ஒன்றாக அரசியல் பயணத்தை மேற்கொண்டது ஜெட்லியுடன்தான். அவருடன் நான் எப்போதுமே இணைந்திருந்தேன், அவருடன் நான் போராட்டங்களை எதிர்கொண்டேன், கனவு கண்டேன், அந்த கனவுகளை நிறைவேற்றினேன்", என்று பிரதமர் மோடி கூறினார்.

    English summary
    Prime Minister Narendra Modi was on a state visit to the three countries when former Union Minister Arun Jaitley died. At this juncture, Modi said that his first task after returning home was to visit the Jaitley home and comfort his family.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X