டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில் தனியார் பயணிகள் ரயில்.. ஓடப்போகுது இந்தியாவில்.. மோடி அரசு அதிரடி திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: தனியார்களை முதல்கட்டமாக குறிப்பிட்ட சில பாதைகளில் பயணிகள் ரயில்களை இயக்க அனுமதிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி இந்திய ரயில்வே குறைந்த அளவிலான போக்குவரத்து நெரிசல் உள்ள ரயில் வழித்தடங்கள் மற்றும் சுற்றுலா வழித்தடங்களில் தனியார்களை பயணிகள் ரயில் இயக்க அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்தஆண்டு இந்திய ரயில்வே துறை, ரயில் உள்கட்டமைப்பில் முதலீடுகள் செய்ய வருமாறு தனியார்களை கூவி கூவி அழைத்தது. இதன்படி ரயில் நிலையங்களைத் தனியாருக்குக் கொடுப்பது, பயன்பாட்டில் இல்லாத ரயில்வேக்கு சொந்தமான இடங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பது எனப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் ரயில் நிலையங்களை தனியாருக்கு விடும் முயற்சி பெரிய அளவில் இன்னும் வெற்றிபெறவில்லை

private operators may run passenger trains on select routes in india

இந்நிலையில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததையடுத்து ரயில்வேயில் தனியார் மயமாக்கும் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள் எவை தெரியுமா? ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள் எவை தெரியுமா?

இதன்படி கூட்ட நெரிசல் குறைவாக உள்ள ரயில் வழித்தடத்தில் மற்றும் சுற்றுலா வழிடத்தடத்தில் பயணிகள் ரயில்களை தனியாரை இயக்க அனுமதிக்கலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.

இது தொடர்பாக ரயில்வே போர்டு சேர்மன் விகேயாதவ் மற்றும் உயர்அதிகாரிகள் செவ்வாய்கிழமை நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களை இயக்கும் உரிமையை பெறுவதற்காக ஏலத்தில் பங்கேற்க யார் யார் ஆர்வம் காட்டுவர்கள் என்பது பற்றி அடையாளம் கண்டு வருகிறது. முதல்கட்டமாக சோதனை முயற்சியாக ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற இரண்டு ரயில்களை சுற்றுலா வழித்தடத்தில் இயக்க தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக அடுத்த 4 மாதத்தில் ஒப்பந்நதம் கோரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

English summary
Pvt operators may run passenger trains on select routes in india, On an experimental basis, two trains may be allotted to IRCTC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X