திருவனந்தபுரம் ஏர்போர்ட் குத்தகை.. மத்திய அமைச்சருக்கு எதிராக கேரள எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்
டெல்லி: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான விவகாரத்தில், கேரளாவைச் சேர்ந்த சிபிஐ (எம்) மாநிலங்களவை எம்.பி., எலமாரம் கரீம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்துள்ளார்.
இது பற்றி, கரீம் மாநிலங்களவை செயலாளர் தேஷ் தீபக் வர்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜ்யசபா நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் 187 வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்குவதாக கரீம் அதில் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தி ஆகிய விமான நிலையங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய அரசு ஒருதலைப்பட்ச முடிவை எடுத்துள்ளது என்றும், இது கேரள மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும்...எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்...கடம்பூர் ராஜூ விருப்பம்!!
இந்த நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாக ஹர்தீப் சிங் பூரி மார்ச் மாதம் அவையில் கூறியதாகவும், அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அப்போது அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும், ஆனால், மத்திய அமைச்சரவை திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. எனவே அவைக்கு தவறான தகவலை கூறியதற்காக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எதிராக உரிமை மீரல் பிரச்சினை கிளப்பியுள்ளார் கரீம்.