டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரியங்கா புயல் பாஜகவை காலி செய்யப் போகிறது.. கருத்துக் கணிப்பில் பரபரப்பு முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரியங்கா காந்தியால் பாஜகவின் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கனவு தகர வாய்ப்புள்ளதாக ஏபிபி நியூஸ் - சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிப்ரவரி 11ம் தேதி உ.பி. கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக முறைப்படி பொறுப்பேற்கவுள்ளார். இப்போதே அவர் டெல்லியில் அமர்ந்தபடி பணிகளை ஆரம்பித்து விட்டாலும் கூட 11ம் தேதிதான் உ.பியில் முறைப்படி களம் இறங்கவுள்ளார். இதனால் காங்கிரஸார் பெரும் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி வருகையால் என்ன மாதிரியான பாதிப்புகள் தாக்கங்கள் ஏற்படப் போகிறது என்பது குறித்து ஏபிபி நியூஸ் - சிவோட்டர் சர்வே நடத்தியது. அதன் சுவாரஸ் முடிவுகளில் ஒன்று இதோ..

நாடு முழுவதும் பயன் தரும்

நாடு முழுவதும் பயன் தரும்

பிரியங்காவின் வருகையால் யாருக்கு பலன் கிடைக்கும் என்ற கேள்விக்கு நாடு முழுவதற்கும் காங்கிரஸ் கட்சிக்கு பலன் தரும் என 50% பேர் கூறினர். உ.பி. கிழக்குக்கு மட்டுமே பயன் என்று 18% பேர் கருத்துக் கூறியுள்ளனர். 24% பேர் அரசியல் களத்தில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

பாஜகவுக்கு ஆபத்து

பாஜகவுக்கு ஆபத்து

52 சதவீதம் பேர் பிரியங்காவின் அரசியல் எழுச்சி பாஜகவை வரும் தேர்தலில் காலி செய்யும் என்று கூறியுள்ளனர். 32 சதவீதம் பேர் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியை பாதிக்கும் என்று கூறியுள்ளனர். 8 சதவீதம் பேர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

எங்களுக்குக் கவலை இல்லை

எங்களுக்குக் கவலை இல்லை

இதுகுறித்து பாஜக தலைவர் ஷானவாஸ் உசேன் கூறுகையில், பிரியங்கா காந்தி குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அமேதி, ரேபரேலியில் இந்த முறை பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

பிரியங்காவை விமர்சிக்கும் பாஜக

பிரியங்காவை விமர்சிக்கும் பாஜக

பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வத்ரா குறித்து தனிப்பட்ட முறையில் பாஜக பேசுவது அக்கட்சிக்குத்தான் ஆபத்தை ஏற்படுத்தும் என 71 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் அது பாஜகவுக்கு பயன் தரும் என்று கூறியுள்ளனர்.

இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாம்

இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாம்

பிரியங்கா காந்தி இன்னும் சீக்கிரம் அரசியலுக்கு வந்திருக்கலாம் என்று கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 3ல் 2 பங்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் இது தாமதமில்லை என்று கூறியுள்ளனர்.

இந்திரா மாதிரி

இந்திரா மாதிரி

பிரியங்கா காந்தி தனது பாட்டி இந்திரா காந்தி மாதிரி இருக்கிறார் என்று 44 சதவீதம் பேரும், இல்லை என்று 42 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

English summary
ABP news - Cvoter survey has predicted that Priyakna Gandhi may dent BJP's prospects in the 2019 LS polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X