டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெல்லாம் முடிஞ்சிபோன கதை.. 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்.. ரிப்போர்ட் கார்டை எடுங்க- பிரியங்கா சுளீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka slams Modi directly | மோடியை நேரடியாக தாக்கி பேசிய பிரியங்கா

    டெல்லி: 70 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் சாதனைகள் குறித்து பாஜகவினர் பேசுவது காலம் தாழ்ந்த செயல். கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். எங்கே உங்கள் சாதனை விளக்க பட்டியலை எடுங்கள் பார்ப்போம் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரியங்கா காந்தி முதல் முறையாக நேரடி அரசியலுக்கு வந்துள்ளார். அவர் உத்தரப்பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கங்கையில் 3 நாட்கள் பயணம் செய்கிறார்.

    Priyanka asks show me your 5 years report card

    சுமார் 145 கி.மீ.தூரம் இவர் படகில் செல்கிறார். இதுதான் கங்கை யாத்திரை என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு ஒன்றையும் செய்யவில்லை என பாஜக பிரசாரம் செய்கிறது.

    டைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்புடைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு

    இதுகுறித்து கங்கை யாத்திரையில் உள்ள பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் முந்தைய காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டுவதை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வி காலம் தாழ்ந்த கேள்வியாகும். நீங்கள் 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள். உங்கள் சாதனை விளக்க பட்டியலை எடுங்கள். பார்ப்போம். ராகுல் காந்தியின் சகோதரி பிக்னிக் செல்கிறார் என துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

    ஆனால் நான் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக இத்தாலிக்குக்கூட செல்லவில்லை. எனது பாட்டியை பார்க்க வேண்டும் என்றார் பிரியங்கா காந்தி.

    English summary
    Priyanka Gandhi Vadra asked the BJP government to stop blaming previous Congress regimes and talk about what it had done in the last five years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X