டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயிருக்கு போராடிய சிறுமி.. சொந்த காசில், டெல்லிக்கு தனியார் ஜெட்டில் அனுப்பி வைத்த பிரியங்கா காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவ உதவி தேவைப்பட்ட இரண்டரை வயது சிறுமியை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்து மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

லோக்சபா தேர்தலை ஒட்டி, பிரியங்கா காந்தி தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தபோது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் சுக்லா அவரை அணுகி ஒரு தகவலை தெரிவித்தார்.

Priyanka Gandhi arrange jet to rush ill girl to AIIMS

அப்பகுதியில், இரண்டரை வயது சிறுமி ஒருவர், மூளைக்கட்டியால், பாதிக்கப்பட்டு கமலா நேரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் உடல்நிலை மோசமானதால், அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையில், டாக்டர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்டதும், உடனே தாமதிக்காத பிரியங்கா காந்தி, தனியார் விமானத்தை ஏற்பாடு செய்து அந்த சிறுமியை, அங்கிருந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் நெகிழ்ந்துபோன, சிறுமி குடும்பத்தார், பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஊழல், ஜிஎஸ்டி, விவசாயிகள் பிரச்சனை.. விவாதிக்க ரெடியா? மோடிக்கு ராகுல் சவால் ஊழல், ஜிஎஸ்டி, விவசாயிகள் பிரச்சனை.. விவாதிக்க ரெடியா? மோடிக்கு ராகுல் சவால்

ஏற்கனவே, டெல்லியில் விபத்தில் காயம்பட்ட ஒரு பத்திரிகையாளரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது காரில் ஏற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress general secretary for Uttar Pradesh (East) Priyanka Gandhi Vadra helped airlift a two and a half-year-old girl suffering from a tumour to AIIMS Delhi on Friday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X