டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணனுக்காக வயநாடு வருகிறார் பிரியங்கா... 2 நாட்களுக்கு தீவிர பிரசாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வயநாடு வருகிறார் பிரியங்கா, 2 நாட்களுக்கு பிரசாரம்

    டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும், வயநாடு தொகுதியில் நாளை முதல் 2 நாட்களுக்கு அக்கட்சியின், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    வயநாடு தொகுதியில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். 21-ந் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய உள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி நாளை வருகிறார்.

    priyanka gandhi campaign for 2 days In Wayanad Constituency

    வயநாடு தொகுதியில் மனுதாக்கல் செய்த பிறகு ராகுலும், பிரியங்காவும் சேர்ந்து சாலையில் தொண்டர்களின் அலைகளுக்கு மத்தியில் மிதந்து சென்றனர். அதன் பிறகு சமீபத்தில் ராகுல் மட்டும் வந்து ஒரு நாள் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

    நாடு முழுவதும், பிரச்சாரம் இருந்ததால், மீண்டும் வயநாடு தொகுதிக்கு ராகுலால் வர இயலவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பதில் பிரியங்கா வயநாடு தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய 2 நாள் வருகிறார் பிரியங்கா காந்தி.

    பொன்பரப்பி கலவரம் பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்.. வெடித்த சர்ச்சை பொன்பரப்பி கலவரம் பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்.. வெடித்த சர்ச்சை

    வயநாடு தொகுதியில் 80 சதவீதம் பேர் விவசாயிகள் என்பதால், அவர்களுடன் கலந்துரையாடல் நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரியங்கா சந்தித்து பேச உள்ளார். 2-வது நாள் நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். அன்றிரவே அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    English summary
    Loksabha Elections 2019: Priyanka gandhi campaign for 2 days In Wayanad Constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X