டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீட்டை காலி செய்யும் பிரியங்கா.. டீ பார்ட்டிக்கு ஏற்பாடு.. பாஜக தலைவருக்கும் அழைப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் குடியிருந்து வரும் அரசு வீட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலி செய்ய இருக்கிறார். இந்த நிலையில் அந்த வீட்டில் அடுத்து குடியிருக்க வரவிருக்கும் பாஜக தலைவர் அனில் பலுனி மற்றும் அவரது மனைவியை தேநீர் அருந்துவதற்கு பிரியங்கா காந்தி அழைத்து இருக்கிறார்.

டெல்லியில் லோதி ஸ்டேட் பங்களாவில் கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்தாண்டு இவருக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.

Priyanka Gandhi invites BJP leader Anil Baluni for tea before vacating the house

இதையடுத்து இந்த வீட்டை ஜூலை ஒன்றாம் தேதி காலி செய்யுமாறு இவருக்கு மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து மீண்டும் ஒரு மாதம் குடியிருக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அனில் பலுனிக்கு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்று கூறினாலும், அவர்தான் பிரியங்கா இருக்கும் வீட்டுக்கு செல்ல இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

தற்போதைக்கு குருகிராம் பகுதியில் குடியிருந்து வரும் பிரியங்கா பின்னர் மீண்டும் டெல்லிக்கு குடிபெயர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா இருப்பதால், அங்கு குடிபெயர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைக்கு குருகிராம் பகுதியில் குடியிருந்து வரும் பிரியாங்கா பின்னர் மீண்டும் டெல்லிக்கு குடிபெயர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா இருப்பதால், அங்கு குடிபெயர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ப்ளீஸ்.. யாராவது கொரோனாவுக்கு ஒரு இ-பாஸ் வாங்கிக் கொடுங்களேன்! ப்ளீஸ்.. யாராவது கொரோனாவுக்கு ஒரு இ-பாஸ் வாங்கிக் கொடுங்களேன்!

மத்திய அரசு பிரியங்காவுக்கு அனுப்பி இருந்த நோட்டீசில், ''மத்திய அரசு வழங்கி வந்த இசட் பிளஸ் மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படை வாபஸ் பெறப்பட்ட பின்னர் அரசு வீடு வழங்க முடியாது. அதற்கான தகுதியை இழக்கிறீர்கள். ஜூலை ஒன்றாம் தேதி வீட்டை காலி செய்ய வேண்டும். அதற்கு மேல் குடியிருக்க நேர்ந்தால், அபராத வாடகை செலுத்த வேண்டியது இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டெல்லி வீட்டில் இருந்து பிரியங்காவை வெளியேற்ற மத்திய அரசு எடுத்து இருக்கும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

ப்ளீஸ்.. யாராவது கொரோனாவுக்கு ஒரு இ-பாஸ் வாங்கிக் கொடுங்களேன்!

English summary
Priyanka Gandhi invites BJP leader Anil Baluni for tea before vacating the house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X