டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப.சிதம்பரத்தை வெட்கமில்லாமல் வேட்டையாடும் கோழைகள்.. பிரியங்கா காந்தி ஆவேசம்

ப.சிதம்பரம் விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka Gandhi tweets on P chidambaram | ப.சிதம்பரம் கைது நடவடிக்கை :பிரியங்கா காந்தி ஆவேசம்-வீடியோ

    டெல்லி: நாட்டுக்காக உழைத்தவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். அப்படிப்பட்டவரை வெட்கமே இல்லாமல் வேட்டையாடுகிறார்கள் கோழைகள் என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக கூறியுள்ளார்.

    ப.சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ துடியாய் துடித்துக் கொண்டுள்ளது. மறுபக்கம் அமலாக்கப் பிரிவும் விசாரணைக்காக காத்துள்ளனர். நடுவில் ப.சிதம்பரம் மாயமாகி விட்டார்.

    2 மணி நேரத்தில் அவர் ஆஜராக வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. அவரது முன்ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டும் கூறி விட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரம் விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

     என்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகணும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி என்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகணும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி

    பிரியங்கா காந்தி

    ப.சிதம்பரம் குறித்து பிரியங்கா காந்தி டிவீட் போட்டுள்ளார். அதில், மிகவும் மரியாதைக்குரிய, தகுதி வாய்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ப.சிதம்பரம்.

     நாட்டுக்காக

    நாட்டுக்காக

    நாட்டுக்காக பல வருட காலம் உழைத்தவர். நிதியமைச்சராக, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மனதில் பட்ட உண்மையை பளிச்சென பேசக் கூடியவர். அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியவர்.

    வேட்டையாடும் கோழைகள்

    இப்படிப்பட்டவரை கோழைகள் வெட்கமே இல்லாமல் வேட்டையாடுகிறார்கள். நாங்கள் ப.சிதம்பரத்துடன் இருக்கிறோம். அவருக்கு துணை நிற்கிறோம். உண்மைக்கு எதிரான போராட்டம் தொடரும். விளைவுகள் எதுவாக இருப்பினும் கவலை இல்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

    ஏன் ஓடி ஒளியணும்

    இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் போட்டுள்ள .ப சி குற்றவாளி அல்ல? வேலிக்கு ஓணான் சாட்சி? சிங்வி! ஏன் ஓடி ஒளியவேண்டும் என்று கேட்டுள்ளார்.

    English summary
    Congress Priyanaka Gandhi Tweet about P Chidambaram INX case issue case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X