டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போக கூடாது.. வழி மறித்த போலீஸ்.. கண்டுகொள்ளாமல் ஸ்கூட்டரில் பறந்த பிரியங்கா காந்தி.. ஒரு ஜிவ் சேஸிங்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தர பிரதேசத்தில், போலீசாரின் கெடுபிடியை மீறி, ஸ்கூட்டரில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்கு சென்றுள்ளார் பிரியங்கா காந்தி.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Priyanka Gandhi Vadra stopped by police and she travelled on a two-wheeler

உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவிலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றபோது, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) என்பவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் திடீர் தீ விபத்து!நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் திடீர் தீ விபத்து!

இதையடுத்து, கைது செய்யப்பட்ட தாராபுரியின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின், உத்தர பிரதேச கிழக்கு பகுதி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அங்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், போலீசார் பிரியங்கா காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி ஒரு நபரின் ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி சென்றார். அவரை போலீசார் பின்தொடர்ந்து வாகனத்தில் சென்றனர். அது வீடியோவிலும் பதிவாகியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அந்த சேஸிங் காட்சி உள்ளது.

இருப்பினும் விடாத, பிரியங்கா காந்தி, தாராபுரி குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். இந்த சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, போலீசார் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

English summary
Lucknow: Congress General Secretary for UP (East) Priyanka Gandhi Vadra travelled on a two-wheeler after she was stopped by police while she was on her way to meet family members of Former IPS officer SR Darapuri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X