டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் பிரச்சாரம் மட்டும்தானாம்.. லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டாராம்!

வரும் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: வெறும் பிரச்சாரம் மட்டும்தானாம்... வரும் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என்றே சொல்லப்படுகிறது!

இவ்வளவு காலம் கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்து வந்த பிரியங்காவுக்கு உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பதவி வழங்கினார் ராகுல்காந்தி.

இதனால் சோனியா காந்தி தொகுதியான ரேபரேலியில் போட்டியிட போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு.. ராகுல் காந்தி வேகமாக பேச.. அதை விட அதிவேகமாக மொழிபெயர்த்த தங்கபாலு! என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு.. ராகுல் காந்தி வேகமாக பேச.. அதை விட அதிவேகமாக மொழிபெயர்த்த தங்கபாலு!

சோனியா காந்தி

சோனியா காந்தி

ஆனால் அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தியின் பெயர் இல்லை. குறிப்பாக ரேபரேலி தொகுதியில், யாருமே நினைக்காத வகையில் சோனியாவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

புது தகவல்

புது தகவல்

இதையடுத்து இனி வரும் பட்டியல்களில் பிரியங்கா பெயர் கண்டிப்பாக இருக்கும் என்று எதிபார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது கிடைத்துள்ள புது தகவல் என்னவென்றால், பிரியங்கா தேர்தலிலேயே போட்டியிட போவதில்லை என்பதுதானாம்! வழக்கம்போல் பிரச்சாரத்தில் மட்டும் பிரியங்கா ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

முக்கிய பிரச்சனைகள்

முக்கிய பிரச்சனைகள்

தேர்தலில் நேரடி போட்டி இல்லை என்றாலும், உபி மாநிலத்தின் சூழல், எதிர்தரப்பினரின் நடவடிக்கைகள், சிறுபான்மை, மற்றும் தலித் மக்களின் முக்கிய பிரச்சனைகள், இவைகளையெல்லாம் முன்னெடுத்துதான் பிரியங்கா உபி மாநில அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அடுத்த அத்தியாயம்

அடுத்த அத்தியாயம்

அதனால் அவர் பிரச்சாரம் செய்தாலும் சரி, அல்லது கட்சி பொறுப்பை கவனித்து கொண்டாலும் சரி.. மேற்கண்ட விஷயங்களை மட்டும் ஒருக்காலும் விட்டுவிடவே மாட்டார் என்பது மட்டும் உண்மை! அது மட்டுமல்ல.. காங்கிரசின் அடுத்த அத்தியாயத்தை எழுதப் போவதும் பிரியங்காதான்!

English summary
Priyanka- Gandhi will not contest in Lok sabha elction
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X