டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா?.. இதுதான் இந்திய கலாச்சாரமா?.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: வெடிமருந்துகளை யானைக்கு கொடுத்து கொல்வது இந்திய கலாச்சாரம் இல்லை என்றும் கேரளாவில் கருவுற்ற யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Kerala Elephant: அன்னாச்சி பழத்தில் வெடி..தண்ணீரில் நின்ற படி உயிரை விட்ட கர்ப்பிணி யானை

    கேரள மாநிலம் மணப்புரத்தில் கருவுற்ற யானை ஒன்று வனப்பகுதிக்கும் கிராமப் பகுதிக்கும் இடையே உணவுக்காக சுற்றி வந்தது. 20 நாட்களுக்கு முன்னர் பழங்களை சாப்பிட்ட அந்த யானை உணவில்லாமல் கிராமத்தை நோக்கி வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த யானையை அங்கிருந்து விரட்டுவதற்காக அன்னாசி பழத்தில் வெடிமருந்துகளை மறைத்துவைத்து கிராம மக்கள் கொடுத்தனர். அப்போது அந்த பசிக் கொடுமையால் ஆசையாக அந்த பழத்தை வாங்கி வாயினுள் போட்ட அந்த யானைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது?

    தாடை கிழிந்தது

    தாடை கிழிந்தது

    வாயில் போட்டவுடன் வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கின. அப்போது அதன் தாடை கிழிந்தது. இதனால் தாள முடியாத வலியால் யானை துடித்தது. இதனால் உணவு உட்கொள்ள முடியாமல் வலியாலும் தன் வயிற்றில் உள்ள குட்டி பட்டினி கிடக்கும் வேதனையாலும் அந்த யானை சுற்றி வந்தது. பின்னர் வலி தாள முடியாமல் வெள்ளியாறுக்கு சென்ற அந்த யானை தனது வாய், தும்பிக்கை மூழ்கும்படி நின்றது.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானையை மீட்க இரு ஆண் யானைகளை கொண்டு வந்தனர். அந்த யானைகள் நீரில் இறங்கிய போது உடனே அந்த பெண் யானை இறந்துவிட்டது. இதை பார்த்து ஆண் யானைகளும் கண்ணீர் விட்டன. இதையடுத்து அந்த யானையை பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோதுதான் அது ஒரு மாதம் கருவுற்றிருந்ததும், அடுத்த 20 மாதங்களில் அழகான குட்டியை ஈன்றிருக்க இருப்பதும் தெரியவந்தது.

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    இது போல் ஈவு இரக்கமில்லாமல் யானையை விரட்டுவதற்காக வெடிமருந்தை வைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. வலியால் தாள முடியாமல் போனாலும் எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தாமல் அந்த யானை இறந்தது சமூக வலைதளங்களில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

    ட்விட்டரில் கண்டனம்

    இதுகுறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில் கூறுகையில் மலப்புரத்தில் யானையை கொன்றதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். எந்த குற்றவாளியும் தப்பமுடியாது. ஒரு யானைக்கு பட்டாசுகளை கொடுத்து கொல்வது நமது இந்திய கலாச்சாரம் இல்லை என்றார்.

    English summary
    Minister Prakash Javadekar says that probe will be initiated for murder of Pregnant elephant by feeding pineapple with hidden explosives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X