டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப.சிக்கு எதிராக ஒரு ஆதாரத்தை காட்டுங்கள்.. வழக்கை வாபஸ் பெறுகிறேன்.. பொறி பறந்த கபில் சிபல் வாதம்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    INX Media Case: P Chidambaram is not cooperating says CBI

    டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரின் காவல் இன்றோடு முடிகிறது.

    இவரை இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை கைது செய்ய துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறைக்கு எதிரான ப. சிதம்பரத்தின் மனு மீது இன்று விசாரணை நடந்தது.

    அனுமதி

    அனுமதி

    அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்ய அனுமதிக்க கூடாது, ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் முன் ஜமீனை நீட்டிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சிபிஐக்கு எதிரான முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மனு மீது விசாரணை நடந்தது. இதில் ப. சிதம்பரம் சார்பாக வாதம் செய்த கபில் சிபல், அமலாக்கத்துறை ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிட்டு சமர்ப்பித்துள்ளது.

    ஆதாரம்

    ஆதாரம்

    சீலிட்ட ஆதாரத்திற்கு எதிரான நான் எப்படி வாதாட முடியும்.என்ன ஆதாரம் என்றே தெரியாமல் நான் எப்படி வாதாட முடியும்.பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை தரப்பு கசியவிட்டு இருக்கிறது. பிரமாண பத்திரம் மீடியாக்களில் வெளியாகி உள்ளது.

    என்ன டைரி

    என்ன டைரி

    பிரமாண பத்திரத்தை டிவி சேனல்களில் கசியவிட்டுவிட்டனர்.உச்ச நீதிமன்றத்தில் கேஸ் டைரியை ஆதாரமாக அளித்து இருக்கிறார்கள்.கேஸ் டைரியை ஆதாரமாக அளிக்க சட்டத்தில் இடமில்லை. உருப்படியான ஒரு ஆதாரத்தை கூட அவர்கள் மனுவில் தாக்கல் செய்யவில்லை. என்ன ஆதாரத்தை வைத்து இந்த வழக்க நடக்கிறது.

    கேள்வி

    கேள்வி

    கடந்த 5 நாட்களாக ப. சிதம்பரத்திடம் சிபிஐ கேள்வியே கேட்கவில்லை.அவரை காவலில் எடுத்துவிட்டு எதுவுமே விசாரிக்கவில்லை.சிதம்பரத்திற்கு எதிராக இந்த வழக்கில் ஒரு ஆதாரம் காட்டுங்கள்.

    வழக்கு வாபஸ்

    வழக்கு வாபஸ்

    சிதம்பரத்திற்கு எதிராக ஒரு ஆதாரம் இருந்தால் கூட என் வழக்கை வாபஸ் பெறுகிறேன்.சிதம்பரத்திடம் 17 வங்கி கணக்கு இருப்பதாக அமலாக்கத்துறை சொல்கிறது.ஆனால் சிதம்பரத்திடம் அது தொடர்பாக ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை.

    டிவிட்டர்

    டிவிட்டர்

    சிதம்பரத்திடம் வங்கி கணக்குகள் குறித்து யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அவரிடம் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று மட்டும்தான் கேட்டுள்ளனர். இதுதான் சிபிஐ விசாரணை நடத்திய லட்சணம், என்று கபில் சிபல் வாதம் செய்துள்ளார்.

    English summary
    In Media Case: Produce one evidence against P Chidambaram, I will withdraw the case says Kapil Cibil in SC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X