டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடக் கொடுமையே..பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம்... விளம்பரத்திற்கே 50% மேல் செலவாய்ருச்சாம்

Google Oneindia Tamil News

டெல்லி: பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், விளம்பரத்திற்கு மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் இத்திட்டத்தை ஹரியானாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Protection of Girl Child Scheme 50 Percent of the Money Spent on Advertisements

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்' திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும். இதில் ரூ.364.66 கோடி விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் மக்களவையில் தாக்கல் செய்த தகவலில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.200 கோடி நிதியில் ரூ. 135.71 கோடி (68% நிதி ) விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது.

மேலும், 2018-19-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.280 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் 70.63 கோடி ரூபாய் மட்டும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

English summary
Government has said that 56 percent of the money is spent on advertisements for the protection of Girl child scheme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X