டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணை வேந்தர் ஒரு திருடர்.. அரசியல் செய்கிறார்.. ஜேஎன்யூ மாணவர்கள் பகீர் புகார்.. என்ன நடக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் ஒரு திருடர் என்று பல்கலைக்கழக மாணவர்கள் புகார் வைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    JNU Protest | விடாமல் போராடும் மாணவர்கள்... ஜேஎன்யூ போராட்டத்திற்கு காரணம் என்ன ?

    டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் ஒரு திருடர் என்று பல்கலைக்கழக மாணவர்கள் புகார் வைத்துள்ளனர்.

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் முதலாவது பல்கலை நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் நிலவி வரும் சண்டை. துணை வேந்தருக்கும் மாணவர்களுக்கும் இடையில் கடந்த இரண்டு மாதமாக இந்த பிரச்சனை நடந்து வருகிறது.

    சில வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் விடுதி மாணவர்களுக்கு புதிய விதிகளை பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது.புதிய கடுமையான விதிகள் சில விதிக்கும் பொருட்டு இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

    இதில்தான் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதியில் மாணவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து அங்குள்ள மாணவ சங்கத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு!டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு!

    முக்கிய காரணம்

    முக்கிய காரணம்

    மாணவர்களிடம் சொல்லாமல் விதிகளை மாற்றியதால் கோபப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதுதான் போராட்டத்திற்கு மெயின் காரணம். இதையடுத்து விடுதி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த கூட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்தனர். கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற மாணவர்கள், அந்த அறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விடுதியில் மாணவர்களுக்கு புதிய கடுமையான விதிகள் விதிக்கப்படுகிறது.

    உமேஷ்

    உமேஷ்

    இந்த போராட்டத்தின் போது, பல்கலை டீன் உமேஷ் கதம் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஹை பிபி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை அன்று அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதில் சிலர் மீது வழக்கு பதியப்பட்டது.

    ஏற்கப்படவில்லை

    ஏற்கப்படவில்லை

    சுமார் இரண்டு வாரங்கள் முன்பு இந்த போராட்டம் நடந்தது. ஆனால் மாணவர்களின் கோரிக்கை அப்போது ஏற்கப்படவில்லை என்பதால், தற்போது தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அங்கு போராடும் மாணவர்கள் இதுகுறித்து கூறும் போது, எங்களுக்கு இப்போது இந்த போராட்ட களத்திற்கு விசி வர வேண்டும். துணை வேந்தர் வேந்தர் ஜெகதீஷ் குமார் இங்கு வந்து எங்களிடம் பேச வேண்டும். அவர் மாணவர்களின் பணத்தை திருடுகிறார். ஆம் மாணவர்கள் அபராத கட்டணமாக கொடுக்கும் பணத்தை அவர் கொள்ளையடிக்கிறார்.

     திருடிவிட்டார்

    திருடிவிட்டார்

    எங்களிடம் அபராதம் என்று கூறி அவர் பொய் கணக்கு காட்டுகிறார். குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் இடையே அவர் பாகுபாடு காட்டுகிறார். இதற்கு முன் கல்லூரி நிர்வாகிகள் அரசியல் ரீதியாக எங்களை கண்டித்தது கிடையாது. ஆனால் தற்போது துணை வேந்தர் அரசியல் ரீதியாக சில மாணவர்களை தண்டிக்கிறார்.

    இரண்டு வாரம்

    இரண்டு வாரம்

    அவர் இங்கே போராட்ட களத்திற்கு வந்து எங்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் இரண்டு வாரமாக தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கே சென்றார். அவருக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது. நாங்கள் ஆசிரியர்களை கட்டிப்போட்டு வைத்து இருப்பதாக அவர் பொய் சொல்கிறார். நாங்கள் அப்படி செய்யவில்லை.

    பெண் மாணவிகள்

    பெண் மாணவிகள்

    எங்களுடன் போராடும் பெண் மாணவிகளை போலீசார் மோசமாக தாக்குகிறார்கள். இங்கிருந்து டெல்லி போலீஸ் வெளியே செல்ல வேண்டும். இது எங்கள் கல்லூரி பிரச்சனை. டெல்லி போலீஸ் கூடத்தான் போராடியது. அதுபோலதான் எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்.

    தண்ணீர் மின்சாரம்

    தண்ணீர் மின்சாரம்

    எங்களுக்கு வெளியே செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தண்ணீர், மின்சாரத்தை விடுதியில் தனியாரிடம் அளிக்க முடிவு செய்துள்ளனர். உணவிற்கு தனியார் ஒப்பந்தம் அளிக்க உள்ளனர். ஆதனால் இதற்கு எதிராக போராடுகிறோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

    பொறுக்க முடியாது

    பொறுக்க முடியாது

    இதை எல்லாமும் இனியும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒன்று சேர்ந்துவிட்டோம். இனி கல்லூரி நிர்வாகம் அடிபணியும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இதை விடமாட்டோம் என்று மாணவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    English summary
    Protest in JNU: Our VC is a Theif, He has political support says, Students in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X