டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.40 கோடி தேவை.. அதனால்தான் மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தினோம்.. ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு!

கடுமையான நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது, நிர்வாகத்தை கவனிக்கவே பணம் இல்லை என்பதால்தான் விடுதி கட்டணத்தை உயர்த்தியதாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    JNU protest | ரூ.40 கோடி தேவை..ஜேஎன்யூ பல்கலை. அறிவிப்பு!

    டெல்லி: கடுமையான நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது, நிர்வாகத்தை கவனிக்கவே பணம் இல்லை என்பதால்தான் விடுதி கட்டணத்தை உயர்த்தியதாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கு கட்டணம் 300% கூடுதலாக உயர்த்தப்பட்டது. உணவு, அறைகளுக்கு தனி கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் தண்ணீர் மற்றும் விடுதி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது.

    இதுதான் தற்போது ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம் நடத்த காரணம். இந்த கட்டண உயர்விற்கு எதிராக டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

    பெரிய பிரச்சனை

    பெரிய பிரச்சனை

    ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. கடந்த வாரம் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். ஆனால் ஜே.என்.யூ. மாணவர்கள் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே சமயம் கல்லூரி நிர்வாகமோ, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகமோ இவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.

    செய்தி குறிப்பு

    செய்தி குறிப்பு

    இந்த நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், ஜேஎன்யூ பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எங்களுக்கு 45 கோடி ரூபாய் வரை பண பற்றாக்குறை நிலவி வருகிறது.

    சலுகைதான் காரணம்

    சலுகைதான் காரணம்

    இதற்கு மாணவர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் சலுகைகள்தான் காரணம். மிகவும் அதிகமாக மின்சார மற்றும் தண்ணீருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதற்கு நிறைய செலவு செய்யப்படுகிறது.

    சம்பளம் என்ன

    சம்பளம் என்ன

    இதனால் ஆசிரியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியவில்லை. விடுதி கட்டணத்தை நாங்கள் அதிகமாக உயர்த்தவில்லை. சர்வீஸ் சார்ஜ் எதுவும் நாங்கள் வசூலிக்கவில்லை. தற்போது நிலவும் பணப்பற்றாக்குறையை போக்குவதற்கே விடுதி கட்டணம் கொஞ்சம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ஜேஎன்யூ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    English summary
    Protest in JNU: The University Management release report on fees hike and its deficit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X