டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி சாலையை மறித்த சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள்.. ஜாப்ராபாத் மெட்ரோ நிலையம் மூடல்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சாலையை சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வழி மறித்து கொண்டு போராடி வரும் நிலையில் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஷாகீன்பாக் பகுதியில் பெண்கள், குழந்தைகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜாப்ராபாத் மெட்ரோ பகுதியில் மேலும் ஒரு போராட்டத்தை பெண்கள், குழந்தைகள் தொடங்கியுள்ளனர். நேற்று இரவு முதல் அந்த பகுதியில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு தம்பிடி காசுக்கு கூட பிரயோஜனமே கிடையாது ... பொங்குவது சு.சுவாமிடிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு தம்பிடி காசுக்கு கூட பிரயோஜனமே கிடையாது ... பொங்குவது சு.சுவாமி

போராட்டம்

போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராகவும் சிஏஏவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியும் மூவர்ணக் கொடியை ஏந்தியும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மவுஜ்பூர் மற்றும் யமுனா விஹாரையும் இணைக்கும் சீலம்பூர் சாலையை மறித்து போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று இரவு தொடங்கிய இந்த போராட்டம் இன்று காலையும் தொடர்ந்தது.

ரயில் நிலையம்

மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி அதிகளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில்வே ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ஜாப்ராபாத் ரயில் நிலையத்திற்கான நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வாயில் மூடப்பட்டுள்ளன. எனவே இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயில் நிற்காது என்றனர்.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

இதுகுறித்து போராட்டக் களத்தில் இருந்த பெண் கூறுகையில் டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் சிஏஏ இதுவரை திரும்ப பெறவில்லை. எனவே போராட்டக்காரர்களும் இடத்தை விட்டு நகரவில்லை. இந்த போராட்டம் சிஏஏ, என்ஆர்சியை எதிர்த்து நடத்தப்படுகிறது. அத்துடன் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டும் போராடுகிறோம்.

நொய்டா சாலை

நொய்டா சாலை

இந்த போராட்டங்கள் ஆரம்பத்தில் பெண்களால் துவங்கப்பட்டது என்றாலும் அதற்கு காரணம் ஆண்களின் ஆதரவுதான். போராட்டம் நடத்த நாங்கள் சாலையை மறித்துள்ளோம். இந்த கொடூரமான சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்றார். டெல்லி- நொய்டா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஷாகீன்பாக் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு போராட்டத்தால் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.

English summary
Anti CAA Protestors block Delhi road and they will stay till caa revoked by Centre. Jaffrabad Metro station's entry and exit closed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X